புது தில்லியில் உள்ள ராஜ்பாத்தில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஸ்டார்ட் அப் இந்தியா (புதிதாகத் தொழில் தொடங்குதல்) குறித்த காட்சிப் படத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (Department of Promotion of Industry and Internal Trade - DPIIT) காட்சிப்படுத்த உள்ளது.
இந்தக் காட்சிப் படமானது ”உச்சத்தை (உயர்ந்த நிலை) அடைய வேண்டும்” என்ற கருப்பொருளின் கீழ் காண்பிக்கப்பட உள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் “ஸ்டார்ட் அப் இந்தியா” பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
2020 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்தியக் கடற்படையானது “அமைதி, வலிமை மற்றும் விரைவு” என்ற கருப்பொருளின் கீழ் தனது காட்சிப் படத்தை காட்சிப்படுத்த உள்ளது.
2020 குடியரசு தின அணிவகுப்பில், டானியா ஷெர்கில் என்பவர் அனைத்து ஆண்கள் படையை வழிநடத்தும் முதலாவது பெண் அதிகாரியாக உருவெடுக்க இருக்கின்றார்.