எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அணிவகுப்பில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
முதன்முறையாக 16 அணிவகுப்புக் குழுக்களில் ஒரு பகுதியாகவும், எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒட்டகக் குழுவின் ஒரு பகுதியாகவும் 12 பெண் வீரர்கள் இடம் பெற்றனர்.
இந்த ஆண்டு, "ஆத்மநிர்பர் பாரத்" என்ற கருப்பொருளை வைத்து, குடியரசு தின அணி வகுப்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுத அமைப்புகள் மட்டுமே காட்சிப் படுத்தப் பட்டன.
புதிதாக பணியமர்த்தப்பட்ட அக்னிவீரர்களும் முதன்முறையாக அணிவகுப்பின் ஒரு பகுதியாக இருந்தனர்.
போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் முதல் முறையாக ஒரு அட்டவணையை காட்சிப் படுத்தியது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, அணிவகுப்பின் போது குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கும் சின்னமான 21-துப்பாக்கி முழக்க மரியாதையில் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட 25-பவுண்டர் துப்பாக்கிகளுக்குப் பதிலாக 105 மிமீ இந்தியத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது.
முதன்முறையாக, வடக்கு மற்றும் தெற்கு பகுதியின் முகப்பில் பாசறை திரும்பும் விழாவின் போது முப்பரிமாணத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.