குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் முடிவுகளுக்கான காலக்கெடு
November 22 , 2025 6 days 36 0
நவம்பர் 20 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம், மாநிலச் சட்டமன்றங்களால் நிறைவேற்றப் பட்ட மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க வேண்டிய சூழலில், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் ஆனது குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்களுக்கான காலக்கெடுவை பரிந்துரைக்க முடியாது என்றும், "ஒப்புதலாக கருதப் படும் உத்தரவை" உச்ச நீதிமன்றத்தால் வழங்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
அத்தகைய உத்தரவுகளை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
200 மற்றும் 201 ஆகிய சரத்துகளின் கீழ் நீதிமன்றங்கள் காலக்கெடுவுக்கு உட்பட்டு நடவடிக்கையை மேற்கொள்ள கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து தெளிவு படுத்தக் கோரிய குடியரசுத் தலைவரின் குறிப்பில் நீதிமன்றம் தனது ஒரு மனதான கருத்தை வெளியிட்டது.
இது தலைமை நீதிபதி B.R. கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், P.S. நரசிம்மா மற்றும் A.S. சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வாகும்.
இது தமிழ்நாடு வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் மீதானதாகும்.
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆனது, மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும் சூழலில் ஆளுநர்களுக்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது.
10 தமிழ்நாடு மசோதாக்களுக்கு ஒப்புதலாகக் கருதப்படும் உத்தரவினை வழங்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 142வது சரத்தினைப் பயன்படுத்துவது அதன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.