TNPSC Thervupettagam

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2022

August 8 , 2022 1075 days 1132 0
  • 14வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆனது, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • மக்களவை பொதுச் செயலாளர் உத்பால் குமார் சிங், இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
  • இந்தியாவின் 14வது குடியரசுத் துணை தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஜக்தீப் தங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தத் தேர்தலுக்கான வாக்காளர் குழுமமானது, 245 மாநிலங்களவை உறுப்பினர்களையும், மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களையும் கொண்டது.
  • மொத்தம் பதிவான 725 வாக்குகளில் 528 வாக்குகளைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஜக்தீப் தங்கர் 346 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
  • இத்தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளைப் பெற்றார்.
  • 80 வயதான ஆல்வா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினர் ஆவார்.
  • மேலும் இவர், ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றியுள்ளார்.
  • மாநிலங்களவையின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 780 வாக்காளர்களில் 725 வாக்காளர்கள் இதில் வாக்களித்தனர்.
  • இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குப் பதிவு 92.94% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்