TNPSC Thervupettagam

குடியுரிமை திருத்த மசோதா 2019

January 9 , 2019 2329 days 764 0
  • 2019 ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்த மசோதா 2019 ஜனவரி 08 ஆம் நாள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது.
  • இந்த மசோதாவானது 2016 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினால் ஆய்வு செய்யப்பட்டது.
  • ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மையின சமூகத்தினருக்கு 12 ஆண்டுகளுக்குப் பதிலாக 6 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தவொரு சரியான ஆவணம் இல்லாவிட்டாலும் இந்தியக் குடியுரிமையை வழங்க இது அனுமதிக்கிறது.
  • மேலும் இது, 1971 மார்ச் 25 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிற்குள் வந்த வெளிநாட்டவர்களை மத பாகுபாடின்றி வெளியேற்றும் 1985ஆம் ஆண்டின் அசாம் ஒப்பந்தத்தை செல்லாததாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்