குடியுரிமைச் சட்டம் மற்றும் இலங்கை இந்துத் தமிழர்கள்
October 21 , 2022 1031 days 575 0
2019 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் (CAA) சமீபத்தியத் திருத்தத்தின் கொள்கைகள் இலங்கையின் இந்துத் தமிழர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்தத் திருத்தத்திற்குள் இலங்கை குறிப்பிடப்படவில்லை என்றாலும், இனி அதே கோட்பாடு சமமாக அந்த நாட்டிற்கும் பொருந்தும்.