TNPSC Thervupettagam

குடியேற்றச் சோதனைச் சாவடி – ஹால்டியா

June 30 , 2026 8 days 86 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது, மேற்கு வங்காளத்தில் உள்ள ஹால்டியா துறைமுகத்தை ஒரு குடியேற்றச் சோதனைச் சாவடியாக அறிவித்துள்ளது.
  • ஹால்தியா இந்தியாவின் 41-வது கடல்வழி குடியேற்றச் சோதனைச் சாவடியாக மாறி உள்ளதுடன் மேலும் இது சர்வதேசப் பயணிகளின் வருகை மற்றும் வெளியேற்றத்தை எளிதாக்கும்.
  • கொல்கத்தா துறைமுகத்தின் பணிச்சுமையைக் குறைப்பதற்காக என்று ஹால்தியா துறைமுக வளாகம் 1968-ஆம் ஆண்டு கட்டப்பட்டதுடன் இதன் சர்வதேச செயல் பாடுகள் 1977-ஆம் ஆண்டில் தொடங்கின.
  • முன்னதாக, குஜராத்தில் உள்ள தஹேஜ், சிக்கா மற்றும் டுனா டெக்ரா துறைமுகங்களும் குடியேற்றச் சோதனைச் சாவடிகளாக அறிவிக்கப்பட்டன.
  • கிழக்குக் கடற்கரை வழியாகக் கடல்சார் வர்த்தகம், சர்வதேசத் தொடர்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்