TNPSC Thervupettagam

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025

September 13 , 2025 10 days 72 0
  • குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025 என்பதின் உருவாக்கம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
  • இது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 என்ற சட்டத்தின் கீழ் வெளியிடப் பட்டது
  • இந்த அறிவிப்பு வெளிநாட்டினரின் பதிவு (விலக்கு) ஆணை, 1957 மற்றும் குடியேற்றம் (கொண்டு வருபவர்களின் பொறுப்பு) ஆணை, 2007 ஆகியவற்றை மாற்றுகிறது.
  • இது இந்தியாவின் குடியேற்றக் கட்டமைப்பு தொடர்பான சில விஷயங்களில் அதிகத் தெளிவை வழங்குகிறது.
  • இது செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பிற செல்லுபடியாகும் பயண ஆவணம் மற்றும் நாட்டிற்குள் நுழைய, தங்க மற்றும் வெளியேற செல்லுபடியாகும் விசா தேவையிலிருந்து ஒரு சிலருக்கு விலக்கு அளிக்கிறது.
  • இது நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டினர்; திபெத்திய அகதிகள்; ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு மதச் சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களை உள்ளடக்கியது.
  • நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி நிலம் அல்லது வான்வழியாக நுழையும்போது பாஸ்போர்ட் மற்றும் விசா தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
  • கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள், அரசுப் போக்குவரத்தின் வாயிலாக தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவிற்குள் நுழையும் அல்லது வெளியேறும் போது அந்த நபர்களுக்கு விலக்கு அளிக்கப் படுகிறது.
  • இந்திய அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வைத்திருக்கும் திபெத்தியர்களுக்கும் இதில் அனுமதி உண்டு.
  • மத துன்புறுத்தல் (அல்லது பயம் காரணமாக) டிசம்பர் 31, 2024 அன்று அல்லது அதற்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்குச் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அல்லது அவர்களின் பாஸ்போர்ட்/விசாக்கள் காலாவதியானாலும் கூட இதிலிருந்து அவர்கள் விலக்கு அளிக்கப் படுகிறார்கள்.
  • விசாக்கள் அல்லது வெளிநாட்டு இந்திய குடிமக்கள் (OCI) பதிவுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் பயோமெட்ரிக் தரவைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்தியாவிற்குள் கைது செய்யப்படும் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவதற்கு காத்திருக்கும் இடங்களில் அல்லது தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவார்கள்.
  • அரசாங்கத்தின் முன் ஒப்புதல் மற்றும் தொடர்பு மேற்பார்வை இல்லாமல் வெளிநாட்டினர் சிகரங்களில் ஏறக் கூடாது.
  • பாதுகாக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதற்கு அனுமதி தேவை என்பதோடு ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டினர் இதில் வெளிப்படையாகவே தடை செய்யப்பட்டுள்ளனர்.
  • இதில் இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய குறிப்பு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
  • இந்த உத்தரவு அவர்களை இலங்கைக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதிலிருந்து பாதுகாக்கிறது.
  • ஜனவரி 9, 2015 வரை இந்தியாவில் தங்குமிடம் தேடி பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள், தங்குதல் மற்றும் வெளியேறுதல் போன்ற நோக்கங்களுக்காக இச்சட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
  • ஆவணமற்ற இலங்கைத் தமிழ் அகதிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) உத்தரவின் படி தண்டனை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர்.
  • எனவே, ஜனவரி 9, 2015க்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் நாட்டினரைக் குறிக்கும் "சட்டவிரோதக் குடியேறி" என்ற குறிச்சொல்லை இந்த உத்தரவு நீக்குகிறது.
  • ஆனால் அவர்கள் நீண்ட கால விசாக்களுக்கு (LTV) விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
  • எனவே இது அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதில் உடனடியாக உதவாது.
  • இலங்கைத் தமிழர்களின் நடமாட்டத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று, அவர்கள் 1967 பாஸ்போர்ட் சட்டம் மற்றும் 1946 வெளிநாட்டினர் சட்டம் (இரண்டு சட்டங்களும் 2025 சட்டத்தால் மாற்றப்பட்டு விட்டன) ஆகியவற்றை மீறுவதாகக் கூறப்பட்டது.
  • குடியுரிமைக்கு முன்னோடியான LTVகள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை வழங்கப்படுகின்றன.
  • ஆனால் வெளிநாட்டினர் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இலங்கைக் குடிமகன் உட்பட எந்தவொரு வெளிநாட்டவரும், 1955 குடியுரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்த பிறகு பதிவு அல்லது இயற்கைமயமாக்கல் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம்.
  • ஜூலை 1983 அல்லது அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வந்த எந்த இலங்கை அகதிகளும் குடியுரிமைச் சட்டம், 1955 என்பதின் விதிகளின் கீழ் இயற்கைமயமாக்கப்படவோ / பதிவு செய்யப்படவோ கூடாது.
  • மூன்று முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த ஆறு முஸ்லிம் அல்லாத குழுக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மத்திய அரசு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமைச் சட்டத்தைத் திருத்திய போது அதில் இலங்கைத் தமிழர்களும் சேர்க்கப்படவில்லை.
  • இந்த செப்டம்பர் 2 அறிவிப்பில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த ஆவணமற்ற உறுப்பினர்கள், டிசம்பர் 31, 2024க்கு முன்னர் பாஸ்போர்ட் அல்லது விசாக்கள் எதுவும் இல்லாமல் அல்லது காலாவதியான பயண ஆவணங்களுடன் இந்தியாவிற்குள் நுழைந்தால், தண்டனை விதிகள் மற்றும் நாடு கடத்தலில் இருந்து அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
  • இந்த ஆறு சமூகங்களும் LTVகளுக்கு விண்ணப்பிக்க முடியும் இதனால் அவர்கள் இந்தியாவில் குறைந்தது 11 ஆண்டுகள் தொடர்ந்து தங்கிய பிறகு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாகிறார்கள் ஆனால் இதில் இலங்கைத் தமிழர்கள் அதற்கு தகுதியுடையவர்கள் அல்ல.
  • இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்காக இந்தியாவில் நிரந்தரக் குடியேற்றம் கோரி செல்லுபடியாகும் பயண ஆவணங்களோடு இந்தியாவிற்குள் நுழையும் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த LTVகளுக்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இந்த ஆணையில் உள்ள மற்ற மூன்று தகுதியான நபர்கள்.
    • இந்தியர்களை மணந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசப் பெண்கள்;
    • இந்தியாவில் இந்தியர்களை மணந்து இந்தியாவில் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டினர்;
    • விதவை/விவாகரத்து காரணமாக இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் பாகிஸ்தான்/வங்கதேசம்/ஆப்கானிஸ்தான் நாட்டுக் குடியுரிமையை வைத்திருக்கும் இந்திய வம்சாவளிப் பெண்கள், அவர்களை ஆதரிக்க ஆண் உறுப்பினர்கள் எவரும் இல்லாதவர்கள்; மற்றும் தீவிர கருணை தேவைப்படும் நபர்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்