அனைத்திந்திய குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பு ஆனது, பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசியப் புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) நடத்தப் படுகிறது.
இது நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் நுகர்வுச் செலவின முறைகள் பற்றியத் தகவல்களைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப் பட்டு உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவு சரக்கு (உணவு மற்றும் உணவு அல்லாத) மற்றும் சேவைகளுக்கான சராசரிச் செலவினங்களைப் பற்றி தெளிவு படுத்துகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வறுமை நிலைகளை மதிப்பிடுவதற்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதாரக் குறிகாட்டிகளை மதிப்பாய்வு செய்யச் செய்வதற்கும் இது பயன்படுகிறது.
2011-12 ஆம் ஆண்டிலிருந்து தனிநபர் குடும்பச் செலவுகள் குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளை இந்தியா பெற்றிருக்கவில்லை.