TNPSC Thervupettagam

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டம்

October 21 , 2020 1750 days 1346 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது 2005 ஆம் ஆண்டின் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை ஒரு மைல்கல்லாகஅறிவித்துள்ளது.
  • இந்தியாவில் பெண்களுக்கெதிரான இது போன்ற குற்றங்கள் பெருகிக்  கிடப்பதாகவும் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்தச் சட்டமானது அரசியலமைப்பின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள பெண்களது உரிமைகளின் மீது அதிக செயல்திறனுள்ள அளவில் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது குடும்பத்திற்குள் நிகழ்கின்ற அல்லது அது தொடர்பான விவகாரங்களினால் ஏற்படும் வன்முறையின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்குப் பாதுகாப்பை அளிக்கின்றது.
  • இந்தியாவில் குடும்ப வன்முறையைத் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகஅங்கீகரிக்கும் முதலாவது குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி இதுவாகும்.
  • இது தனது அம்சங்களைத் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கும், சட்ட நிவாரணங்களுடன் சேர்த்து பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் வழிவகை செய்யும் வகையில் அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்