குடும்பத்திற்கான பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் – ஜூன் 16
June 19 , 2018 2513 days 623 0
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 16-ம் தேதி உலகம் முழுவதும் குடும்பத்திற்கான பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பூர்வீக நாட்டின் நீடித்த வளர்ச்சிக்காகவும், தங்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பங்களின் நலனுக்காகவும் மேற்கொள்ளும் நிதிப் பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகாரம் செய்ய இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம், 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச விவசாயத் துறைக்கான நிதியமைப்பின் (International Fund for Agricultural Development-IFAD) செயற்குழுவின் 38-வது கூட்டத்தில் அனைத்து 176 உறுப்பினர் நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பிற்பாடு இத்தினம் ஐக்கிய நாடுகள் பொது அவையால் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தீர்மானத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குடும்பத்திற்கான பணம் அனுப்புதலுக்கான முதல் சர்வதேச தினம் 2016-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.