TNPSC Thervupettagam

குனார் நதி நீர் பிரச்சினை

December 22 , 2025 3 days 51 0
  • குனார் நதியிலிருந்து நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள தருண்டா அணைக்கு தண்ணீரைத் திருப்பி விடும் திட்டத்தை ஆப்கானிஸ்தான் அங்கீகரித்துள்ளது.
  • குனார் நதி பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் சித்ரால் மாவட்டத்தில் உருவாகி, பாகிஸ்தானுக்குள் மீண்டும் நுழைவதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் பாய்கிறது.
  • இந்த நதியானது இறுதியாக பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள அட்டாக் அருகே சிந்து நதியுடன் இணைகிறது.
  • இந்தத் திசைதிருப்பல் திட்டம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதிக்கான கீழ் மட்ட நீர் ஓட்டத்தைக் குறைக்கலாம்.
  • குறைக்கப்பட்ட நதி ஓட்டம் பாகிஸ்தானில் பாசனம், குடிநீர் வழங்கல் மற்றும் நீர் மின் உற்பத்தியை பாதிக்கும்.
  • குனார் நதி மீது ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முறையான நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் எதுவும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்