TNPSC Thervupettagam

குனோ தேசியப் பூங்காவிற்கு 12 சிவிங்கிப் புலிகள் வருகை

February 22 , 2023 864 days 405 0
  • தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேசத்தினை வந்தடைந்தன.
  • ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் (KNP) அமைந்துள்ள தனிமைப் படுத்தப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளில் அவை விடுவிக்கப்பட்டன.
  • இந்த 12 சிவிங்கிப் புலிகளின் சேர்க்கையுடன் குனோ தேசியப் பூங்காவில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
  • முன்னதாக எட்டு அதிவேக நிலவாழ் விலங்குகள் நமீபியாவிலிருந்து கொண்டு வரப் பட்டதற்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த 12 சிவிங்கிப் புலிகள் இங்கு கொண்டு வரப் பட்டன.
  • இந்தியாவில் வாழ்ந்த கடைசி சிவிங்கிப் புலியானது, 1947 ஆம் ஆண்டில் இன்றைய சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் இறந்ததனால், இது 1952 ஆம் ஆண்டில் அழிந்து விட்ட இனமாக அறிவிக்கப்பட்டது.
  • இந்த தேசியப் பூங்காவானது, விந்தியாச்சல் மலைகளின் வடக்குப் பகுதியில் 700 சதுர கி.மீ. பரப்பளவில் பரவிக் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்