உத்தரப் பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குப்தர் காலத்துப் பழமையான கோவிலின் எச்சங்களை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
குப்தர் காலத்தில் இருந்த 2 கட்டமைப்பு கோயில்கள் மட்டுமே இதுவரை கண்டு பிடிக்கப் பட்டதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் குறிப்பிடத் தக்கதாகிறது.
அந்த இரண்டு கண்டுபிடிப்புகளாவன தசாவதார கோவில் (தியோகர்) மற்றும் பிதர்கான் கோவில் (கான்பூர் தேஹத்)
குப்தர்கள் தான் முதன்முதலில் பழமையான பாறைவெட்டு கொண்டுள்ள கோவில்களிலிருந்து வேறுபட்ட வடிவிலான கட்டமைப்புக் கொண்ட கோயில்களைக் கட்டினார்கள்.