TNPSC Thervupettagam

குப்பை கிடங்கு மீத்தேன் உமிழ்வைக் குறைத்தல்

March 20 , 2026 12 hrs 0 min 14 0
  • "Reducing Methane Emissions from Landfills: The potential of biocover systems" என்ற ஒரு அறிக்கையை Climate and Clean Air Coalition என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • உயிரியல் உறை அமைப்புகள் குப்பைக் கிடங்குகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் உமிழ்வைத் திறம்பட குறைப்பதோடு, காற்றின் தரம் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • உயிரியல் உறைகள்/மூடகம்  என்பது இயற்கையாகத் தோன்றும் பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி மீத்தேனை குறைந்த தீங்கு விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக மாற்றும் ஒரு நுண்ணுயிர் அமைப்பாகும்.
  • இவை நீண்ட காலத்திற்கு 50 சதவீதம் வரையிலான மீத்தேன் உமிழ்வைக் குறைக்க உதவும் என்பதோடு இது கழிவு மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • உலகளாவிய மனிதனால் உருவாக்கப்படும் மீத்தேன் உமிழ்வில் குப்பை கிடங்குகள் சுமார் 11 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்