2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சியாச்சின் பனிப் பாறையில் இருந்து கிட்டத்தட்ட 130 டன் எடையுள்ள கழிவுகளை இந்திய இராணுவம் அப்புறப்படுத்தியுள்ளது.
பனிப் பாறை மீதான கழிவு மேலாண்மை குறித்த 2018 ஆம் ஆண்டு கருத்துக் குறிப்பின் அடிப்படையில், பனிப் பாறைகளிலிருந்து கழிவுகளைக் கீழே கொண்டு வருவதை துருப்புக்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையின் (Standard Operating Procedure - SOP) ஒரு பகுதியாக இந்திய இராணுவம் இணைத்துள்ளது.
சியாச்சின் பனிப் பாறையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 236 டன் கழிவுகள் உருவாகின்றன.
இதுபற்றி
1984 ஆம் ஆண்டில் ‘மேக்தூத் நடவடிக்கையின்’ கீழ் இந்த உயர்ந்த பனிப் பாறையை இந்தியா கைப்பற்றியது.
பனா சோதனைச் சாவடியானது இந்தப் பனிப் பாறையின் மீது ஏறத்தாழ 22,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உயரமான சோதனைச் சாவடியாகும்.
18,000-19,000 அடி உயரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சோதனைச் சாவடிகள் ஒன்றுக்கொன்று நேர் – எதிராக அமைந்துள்ளன.
22,000 அடிக்கு அப்பால் இந்திய ராணுவம் மட்டுமே அங்கு உள்ளது.