TNPSC Thervupettagam

குப்பைக் கிடங்கு சீரமைப்பு விரைவாக்கத் திட்டம்

March 16 , 2026 14 hrs 0 min 45 0
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இலக்கு சுழிய குப்பைக் கிடங்கு என்ற இலக்கை அடைய, ஸ்வச் பாரத் திட்டம்-நகர்ப்புறம் 2.0-இன் கீழ் குப்பைக் கிடங்கு சீரமைப்பு விரைவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் செயல் படுத்தப் படுகிறது.
  • இது பழைய குப்பைக் கிடங்குகளை சீரமைத்து அவற்றைப் பசுமை மண்டலங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 202 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 214 குப்பைக் கிடங்குகளில் தேங்கி உள்ள சுமார் 8.8 கோடி மெட்ரிக் டன் பழைய கழிவுகள் முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கப்பட உள்ளன.
  • 'பழைய கழிவுகள்' என்பது பல ஆண்டுகளாக நிலப்பரப்புகளில் தேங்கியுள்ள நகராட்சி திடக்கழிவுகளைக் குறிக்கிறது.
  • குப்பைக் கிடங்குகள் கசிவுநீர் (மாசுபட்ட திரவம்) மற்றும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்ற நிலப்பரப்பு வாயுக்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளை வெளியிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்