தமிழ்நாடு அரசு மூன்று நாட்கள் அளவிலான மாநிலம் தழுவிய குப்பைத் திருவிழா (குப்பை சேகரிப்பு இயக்கம்) நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த இயக்கம் ஜனவரி 21 முதல் 23, 2026 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடத்தப்படும்.
இந்த முன்னெடுப்பு 2025 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தூய்மைப் பிரச்சாரத்தின் (தூய்மை இயக்கம்) ஒரு பகுதியாகும்.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டின் ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை, அரசு அலுவலகங்களில் நான்கு கட்ட குப்பைச் சேகரிப்பு நடத்தப்பட்டு, 2,877 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு 3.79 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப் பட்டது.
சென்னை மாநகராட்சியில் (GCC), இந்த இயக்கத்திற்காக 200 குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.