TNPSC Thervupettagam

கும்பல்கர் கோட்டை - இந்தியாவின் பெருஞ்சுவர்

May 25 , 2026 14 hrs 0 min 31 0
  • சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது நீளமான தொடர்ச்சியான சுவரைக் கொண்டிருப்பதாக யுனெஸ்கோ கணக்கெடுப்பில் கும்பல்கர் கோட்டை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • கும்பல்கர் கோட்டை ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடரில், உதய்பூரிலிருந்து சுமார் 84 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
  • கி.பி 1443 மற்றும் 1458 ஆம் ஆண்டிற்கு இடையில் ராணா கும்பா என்பவரால் கட்டப்பட்ட இக்கோட்டையின் கட்டிடக் கலைஞர் மாண்டன் ஆவார்.
  • கோட்டைச் சுவர் சுமார் 36 கி.மீ நீளமும் 15-25 அடி அகலமும் கொண்டது, மேலும் இது "போல்ஸ்" எனப்படும் ஏழு வலுவான வாயில்களைக் கொண்டுள்ளது.
  • 2013 ஆம் ஆண்டில் "ராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்" என்பதன் கீழ் யுனெஸ்கோ இதனை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.
  • 360-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ள இக்கோட்டையானது மகாராணா பிரதாப்பின் பிறந்த இடமாகவும் அறியப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்