TNPSC Thervupettagam

கும்பல்கர் வனவிலங்குச் சரணாலயம் - ராஜஸ்தான்

January 24 , 2026 32 days 98 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இராஜஸ்தானில் உள்ள கும்பல்கர் வனவிலங்குச் சரணாலயத்தைச் சுற்றுச்சூழல் தாங்கு மண்டலமாக (ESZ) அறிவித்தது.
  • பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சரணாலயத்தைச் சுற்றி 0–1 கிமீ பரப்பளவில் ESZ அமைந்துள்ளது.
  • ESZ அந்தஸ்து திட்டமிடப்படாத மேம்பாடு, சுரங்கம் மற்றும் தொழில்துறை விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதோடு சமநிலையான பாதுகாப்பு மற்றும் மனிதச் செயல்பாடுகளை உறுதி செய்கிறது.
  • உள்ளூர் சமூகங்கள் கரிம வேளாண்மை, வேளாண் காடுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் போன்ற நிலையான வாழ்வாதார முயற்சிகளால் மிகுந்தப் பயனடைவார்கள்.
  • சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி மாறுநிலை மண்டலங்களாகச் செயல்பட்டு, அன்றாட வாழ்க்கையைத் தடுக்காமல் பல்லுயிரியலைப் பாதுகாக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்