மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள மனாசா நகரில் குய்லின்-பாரே நோய்க்குறி (GBS) பரவல் சமீபத்தில் பதிவாகியுள்ளது.
GBS என்பது ஒரு அரிய நரம்பியல் கோளாறாகும் என்பதோடுஇதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு புற நரம்பு மண்டலத்தை (மூளை மற்றும் முதுகுத் தண்டுக்கு வெளியே உள்ள நரம்புகள்) தவறாக மாற்றி தாக்குகிறது.
GBS பெரும்பாலும் உள்ளங்கால்கள் மற்றும் கால்களில் பலவீனம், கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மையுடன் தொடங்குகிறது என்பதோடுஇது கைகள் மற்றும் முகத்திற்குப் பரவக் கூடும் என்ற நிலையில்மேலும் இது தசை பலவீனம் அல்லது பக்கவாதமாக முன்னேறலாம்.
மாநில அரசுச் சிறப்புப் பிரிவுகள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் சுகாதார குழுக்கள், ASHA பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நோய் கண்டறிதல் ஆய்வுகளுடன் ஒரு கண்டறிதல் மற்றும் சிகிச்சை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் கீழ் அதிகாரிகள் சிகிச்சை செலவுகளை ஈடு செய்து, புதிய பாதிப்புகளை முன் கூட்டியே அடையாளம் காண வீடு வீடாக நோய் கண்டறிதல் நடவடிக்கைகளை நடத்துகிறார்கள் என்ற நிலையில்மேலும் தொற்றுநோயின் மூலத் தோற்றம் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.