குரங்கு அம்மைக்கு எதிரான தடுப்பூசி - 'இமான்வாக்ஸ்'
July 29 , 2022 1210 days 614 0
குரங்கு அம்மைக்கு எதிராகப் பெரியம்மை நோய்த் தடுப்பூசியைப் பயன்படுத்தச் செய்வதற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில், 2013 ஆம் ஆண்டு முதல் பெரியம்மை நோயைத் தடுக்கச் செய்வதற்காக இமான்வாக்ஸ் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.
குரங்கு அம்மை வைரசிற்கும் பெரியம்மை வைரசிற்கும் இடையே உள்ள ஒற்றுமையின் காரணமாக இது குரங்கு அம்மைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்குச் சாத்தியமான தடுப்பூசியாகக் கருதப்படுகிறது.
1980 ஆம் ஆண்டில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பெரியம்மை நோயை விட குரங்கு அம்மை நோய் குறைவான ஆபத்தானது மற்றும் குறைவான தொற்றும் தன்மையினை கொண்டது.
சமீபத்தில், உலக சுகாதார அமைப்பானது குரங்கு அம்மைப் பரவலை ஒரு உலக சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
72 நாடுகளில் 16,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.