TNPSC Thervupettagam

குரில் தீவுகள் சர்ச்சை

August 24 , 2026 11 hrs 0 min 17 0
  • சர்ச்சைக்குரிய குரில் தீவுகளில் உள்ள இடுருப் (Iturup) தீவிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பயணம் மேற்கொண்ட நிலையில் இதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
  • குரில் தீவுகள் என்பது வடக்கு பசிபிக் பெருங்கடலில் சுமார் 1,200 கி.மீ தொலைவிற்கு பரவியுள்ள 56 தீவுகளைக் கொண்ட ஒரு எரிமலை தீவுக்கூட்டமாகும்.
  • வடக்கு பிராந்தியங்கள் என்று அழைக்கப்படும் இடுருப், குனாஷிர், ஷிகோடன் மற்றும் ஹபோமாய் ஆகிய நான்கு தீவுகளுக்கு ஜப்பான் உரிமை கோருகிறது, அதே நேரத்தில் ரஷ்யா அவற்றை சக்காலின் (Sakhalin) பிராந்தியத்தின் ஒரு பகுதியாக நிர்வகிக்கிறது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா இத்தீவுகளின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட நேரத்தில் அதே சமயம் ஜப்பான் தொடர்ந்து அந்த நான்கு தீவுகளின் மீது இறையாண்மை கோரி வருகிறது.
  • ரஷ்யா யால்டா ஒப்பந்தம் மற்றும் போட்ஸ்டாம் பிரகடனம் (1945) போன்ற போருக்குப் பிந்தைய ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டுகிறது, அதே நேரத்தில் ஜப்பான் ஷிமோடா உடன்படிக்கை (1855) மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கை (1875) உள்ளிட்ட முந்தைய ஒப்பந்தங்களைக் குறிப்பிடுகிறது.
  • இந்த சர்ச்சையானது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா-ஜப்பான் இடையே முறையான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்