TNPSC Thervupettagam

குரு தேக் பகதூர் அவர்களின் 350 ஆம் ஆண்டு நினைவு தினம்

December 24 , 2025 14 hrs 0 min 14 0
  • ஒன்பதாவது சீக்கிய குருவான ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் 350வது தியாக ஆண்டைக் குறிக்கும் வகையில் ஹரியானா சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இவர் பின்னாளில் ஆனந்த்பூர் சாஹிப்பின் ஒரு பகுதியாக மாறிய சக்-நாங்கி நகரத்தை பஞ்சாபில் நிறுவினார்.
  • அவரது படைப்புகளில், சீக்கிய மதத்தின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பில் 116 கவிதைப் பாடல்கள் உள்ளன.
  • இந்தியாவின் கௌரவத்தைப் பாதுகாத்ததற்கும், சமயச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், உண்மை மற்றும் நீதியை நிலை நிறுத்துவதற்கும் குரு தேக் பகதூர் நினைவுகூரப்படுகிறார்.
  • கிஷன்புராவில் குரு தேக் பகதூர் வேளாண் கல்லூரியை அமைக்க உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
  • அவரது மரபை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம், அஞ்சல் தலை மற்றும் ஒரு விளக்கப்படப் புத்தகமும் வெளியிடப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்