குருபுரப் என்றும் அழைக்கப்படுகின்ற குருநானக் ஜெயந்தி 2025 ஆனது, இது சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் தேவ் ஜியின் 556வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
நவம்பர் 05 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகின்ற இது கார்த்திக் பூர்ணிமாவுடன் ஒன்றி வருகிறது என்பதோடு மேலும் இது அமைதி, சமத்துவம் மற்றும் ஒரே கடவுள் கொள்கையைக் குறிக்கிறது.
அவர் 1469 ஆம் ஆண்டு ராய் போய் கி தல்வண்டியில் (தற்போது நான்கானா சாஹிப், பாகிஸ்தான்) பிறந்தார்.
குருநானக் ஆசியா முழுவதும் உண்மை, இரக்கம் மற்றும் சேவை பற்றிய செய்திகளைப் பரப்பினார்.
பொற்கோயில் (அமிர்தசரஸ்), பங்களா சாஹிப் (டெல்லி) மற்றும் கர்தார்பூர் சாஹிப் (பாகிஸ்தான்) ஆகியவற்றில் முக்கிய கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
குருநானக்கின் நாம் ஜப்னா (தியானம்), கிராத் கர்னி (நேர்மையான பணி) மற்றும் வந்த் சக்னா (பகிர்வு) போன்ற போதனைகள் உலகளாவிய நல்லிணக்கத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.