குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் வளர்ச்சி
December 5 , 2019 2079 days 1080 0
மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகமானது குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவினரின் (Particularly Vulnerable Tribal Groups - PVTGs) விரிவான சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக “PVTGsகளின் வளர்ச்சி” என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது மொத்தமுள்ள 75 PVTGs வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த PVTGsகள் நாட்டில் மொத்தம் 18 மாநிலங்களிலும் ஒரு ஒன்றியப் பிரதேசத்திலும் (அந்தமான் நிக்கோபார் தீவுகள்) பரவியுள்ளனர்.
இந்த 75 PVTGsகளில் அதிக எண்ணிக்கையிலான PVTGsகள் ஒடிசா (13) மாநிலத்தில் உள்ளனர். இதற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான PVTGsகள் ஆந்திர (12) மாநிலத்தில் உள்ளனர்.
இந்த PVTGsகளின் பட்டியலில் இருளர் (தமிழ்நாடு ) மற்றும் கோண்டா ரெட்டி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய பழங்குடியினர் சமீபத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர்.