குறிப்பிட்ட காலத்திற்குள் இனிப்புக்கான பயன்படுத்துதலைக் காட்சிப் படுத்துதல்
October 3 , 2020 1768 days 667 0
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது பொட்டலங்களில் விற்கப் படும் இனிப்புகளின் விற்பனை குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
மேற்கோள்கள்
விற்பனைக்கு உள்ள பொட்டலம் கட்டப்படாத / பாக்கெட்டுகளில் உள்ள இனிப்புகள் வைக்கப் பட்டிருக்கும் கொள்கலன் / குப்பிகளின் மேல் “குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்துதல்” (Best Before Date) என்ற ஒன்றைக் கட்டாயம் காட்சிப் படுத்த வேண்டும். இது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உணவு வணிகச் செயல்பாட்டாளர்கள் (FBO - Food business operators) இனிப்பு தயாரித்த தேதியையும் காட்சிப் படுத்தலாம். ஆனால் இது கட்டாயமல்ல.
FBO-கள் பொருட்களின் தன்மை மற்றும் உள்ளூர் நிலைமையைப் பொறுத்து இனிப்புகளின் மீது “குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்துதல்” என்ற கூற்றைக் காட்சிப்படுத்த முடிவு செய்யலாம்.