குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் போட்டித் திறன் (LEAN) திட்டம்
March 16 , 2023 890 days 379 0
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் துறை அமைச்சகமானது புதுப்பிக்கப் பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் போட்டித் திறன் (LEAN) திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு உலகளாவியப் போட்டித் திறனில் பங்கேற்பதற்கான ஒரு செயல்திட்டத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமானது உற்பத்தித் துறையையும், இரண்டாம் கட்டமானது சேவைத் துறையையும் உள்ளடக்கும்.
புதுப்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், நம்பகமான மற்றும் ஆலோசனை சார்ந்த கட்டணங்களுக்கான அமலாக்கச் செலவில் மத்திய அரசின் பங்களிப்பு முன்னதாக 80 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 90 சதவீதமாக இருக்கும்..
முன்னதாக, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான காலம் 18 மாதங்களாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
பெண்கள் / பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்குச் சொந்தமான மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள SFURTI தொகுதிகளின் ஓர் அங்கமாக இருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு 90% பங்களிப்புடன் கூடுதலாக 5 சதவீதப் பங்களிப்பு வழங்கப் படும்.