TNPSC Thervupettagam
August 8 , 2025 14 days 72 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியானது, நிலையான 24 மணிநேரத்தை விட 1.34 மில்லி விநாடிகள் குறைவாக இருந்தது.
  • பூமியின் உள் கருவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் வளிமண்டல மற்றும் கடல் அழுத்தத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டது.
  • புவியின் கருவமானது மெதுவாக இயங்கும் போது, வெளிப்புற அடுக்குகள் கோண உந்தத்தைப் பேணுவதற்காக சற்று வேகமாகச் சுழல்கின்றன.
  • பெருங்கடல் நீரோட்டங்கள், காற்று மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையும் பூமியின் சுழற்சி மற்றும் நாளின் நீளத்தை பாதிக்கிறது.
  • இந்த நேரக் குறைப்பானது, அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காது, ஆனால் அணுக் கடிகாரங்கள் மற்றும் உலகளாவிய புவியிடங்காட்டி அமைப்பு போன்ற துல்லியமான நேரக் கட்டுப்பாட்டை சார்ந்திருக்கும் அமைப்புகளைப் பாதிக்கிறது.
  • பூமியின் இது வரையிலான மிகக் குறுகிய நாள், புவியின் சுழற்சி 1.66 மில்லி விநாடிகள் முன்னதாகவே நிறைவடைந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 05 ஆம் தேதி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்