TNPSC Thervupettagam

குறுகியக் காலப் பணியாளர்கள் குறித்த நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கை

July 2 , 2022 1107 days 457 0
  • இந்தியாவிலுள்ள குறுகியக் காலப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
  • 2029-30 ஆம் ஆண்டில் இந்த பணியாளர்களின் எண்ணிக்கையானது 2.35 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிதி ஆயோக் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, 2020-21 ஆம் ஆண்டில் குறுகியக் காலப் பணியாளர்களின் எண்ணிக்கையானது 77 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது குறுகியக் காலப் பணியாளர்களை ஒரு குறிப்பிட்டத் தளத்தினைச் சார்ந்தப் பணியாளர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்டத் தளத்தினைச் சாராதப் பணியாளர்கள் என இரு வேறு பிரிவுகளாக வகைப்படுத்தியது.
  • ஒரு குறிப்பிட்டத் தளத்தினைச் சார்ந்தப் பணியாளர்கள் என்பது இணையதள மென்பொருள் செயலிகள் அல்லது எண்ணிமத் தளங்களின் சேவைக்காகப் பணி புரிபவர்களைக் குறிக்கிறது.
  • ஒரு குறிப்பிட்டத் தளத்தினைச் சாராதப் பணியாளர்கள் என்பது பொதுவாக சாதாரண கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெரும்பாலான துறைகளில் சொந்தமாகப் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ சிறுதொழில் செய்வோர் ஆகியோரைக் குறிக்கிறது.
  • ‘ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியின் பாணியில் ‘பிளாட்ஃபார்ம் இந்தியா முன் முயற்சியை’ அறிமுகப்படுத்த நிதி ஆயோக் பரிந்துரைத்தது.
  • தனது மொத்தப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் ஆகியோரைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கச் செய்வதற்கான முன்மொழிதலையும் இது முன்வைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்