காவிரி டெல்டா பகுதியானது இந்த ஆண்டு அதன் அதிகபட்ச குறுவை நெல் பயிர் சாகுபடி பரப்பளவை அடைந்துள்ளது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிலவரப்படி 6.09 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான குறுவை சாகுபடி பரப்பளவு ஆனது 4.4 லட்சம் ஏக்கர் ஆகும்.
இந்த ஆண்டு சாகுபடியின் பரப்பளவு சாதாரண அளவை விட சுமார் 40 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு, டெல்டாவில் குறுவை சாகுபடியின் கீழ் சுமார் 3.88 லட்சம் ஏக்கர் மட்டுமே பயிரிடப்பட்டது.
இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விடத் தோராயமாக 57 சதவீதம் அதிகமாகும்.
இதற்கு முந்தையதாக பதிவான சாதனைச் சாகுபடி பரப்பு, 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான பயிர் பருவத்தில் பதிவான 5.6 லட்சம் ஏக்கர் பரப்பளவு ஆகும்.
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவு பதிவாகியுள்ளன.