TNPSC Thervupettagam

குறைதீர்ப்பாளர் திட்டம் குறித்த வருடாந்திர அறிக்கை 2024-25

December 6 , 2025 6 days 71 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்திய ரிசர்வ் வங்கியின் 2021 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்தின் (RB-IOS) கீழ், 2024-25 ஆம் ஆண்டிற்கான குறைதீர்ப்பாளர் திட்டத்தின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது.
  • 2024 ஆம் நிதியாண்டில் 11.75 லட்சமாக இருந்த மொத்தப் புகார்களின் எண்ணிக்கை என்பது 13.55% அதிகரித்து 2025 ஆம் நிதியாண்டில் 13.34 லட்சமாக உயர்ந்தது.
  • புகார்களில் வங்கிகள் 81.53%, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) 14.80%, கடன்கள் (29.25%) மற்றும் கடன் அட்டைகள் (20.04%) ஆகிய முதன்மைப் பங்களிப்பு வகைகளாக உள்ளன.
  • பெருநகர மையங்கள் 45.86%, அதைத் தொடர்ந்து நகர்ப்புறம் 25.64%, பகுதியளவு நகர்ப்புறம் 18.46% மற்றும் கிராமப்புறம் 10.4% ஆகியவற்றையும் இதற்குப் பங்களித்து உள்ளன.
  • மையப்படுத்தப்பட்ட ரசீது மற்றும் செயலாக்க மையம் (CRPC) ஆனது 9.11 லட்சம் புகார்களைப் பெற்ற அதே நேரத்தில் தொடர்பு மையங்கள் (CC) 9.27 லட்சம் புகார் அழைப்புகளைக் கையாண்டன.
  • இந்தத் திட்டம் வணிக வங்கிகள், பிராந்தியக் கிராமப்புற வங்கிகள், முதன்மைக் கூட்டுறவு வங்கிகள், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் கொண்ட NBFC மற்றும் கட்டண முறை பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்