TNPSC Thervupettagam

குறைந்த கலோரி கொண்ட சர்க்கரை டேகடோஸ்

January 20 , 2026 14 hrs 0 min 24 0
  • வழக்கமான சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளுக்கு ஆரோக்கியமான மாற்றான டேகடோஸை உற்பத்தி செய்வதற்கான திறமையான பெரிய அளவிலான முறையை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • டேகடோஸ் என்பது இன்சுலின் அளவுகளில் அதிக ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தாத குறைந்த கலோரி கொண்ட இயற்கை சர்க்கரையாகும்.
  • டேகடோஸ், சுக்ரோஸைப் போல சுமார் 92% இனிப்பானது, ஆனால் கலோரிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொண்டது.
  • இது இரத்த குளுக்கோஸில் குறைந்தபட்சத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதனால் இது நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
  • கோழைப் பூஞ்சையிலிருந்து புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கேலக்டோஸ்-1-பாஸ்பேட்-தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்பேடேஸ் நொதியானது இந்தச் செயல்பாட்டில் பயன்படுத்தப் பட்டது.
  • இந்தப் புதிய முறையானது 95% வரையிலான உற்பத்தி வெளியீட்டினை அடைந்தது என்பதோடு இது ஏற்கனவே உள்ள நுட்பங்களை விட மிக அதிகம் ஆகும்.
  • டேகடோஸ் பழங்கள் மற்றும் பால் பொருட்களில் இயற்கையாகவே சிறிய அளவில் காணப் படுகிறது.
  • இது பற்களுக்கு ஏற்றது, தீங்கு விளைவிக்கும் வாய்வழி பாக்டீரியாக்களைக் குறைக்க கூடியது என்பதோடு மேலும் வறண்ட வெப்பமூட்டல் வெப்பநிலையில் நிலைத்து இருக்கும் திறனுடையது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்