2019-20 ஆம் ஆண்டிற்கான அனைத்து காரிப் (kharif) பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP - Minimum Support Prices) அதிகரிப்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை (Cabinet Committee on Economic Affairs - CCEA) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டிற்கான MSP ஆனது இந்திய அளவில் சராசரி உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு அதிகமாகும்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவை விட அவர்களுக்கு அதிக சதவிகிதத்திலான வருமானமானது கம்பு (85%), உளுந்து (64%) மற்றும் துவரம் பருப்பு (68%) ஆகிய பயிர்களில் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டவாறு கிடைக்கின்றது.
MSP நடைமுறையானது சிறு மற்றும் நடுத்தரப் பிரிவில் உள்ள ஏறத்தாழ 86 சதவிகித விவசாயிகளுக்கு நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது. இது விவசாயிகளிடையே நியாயத் தன்மையை உறுதி செய்கின்றது.
மேலும் இது சந்தைகளில் விலைகளை நிலைப்புத் தன்மையுடன் இருக்க உதவுகின்றது. இது நுகர்வோர்களுக்கும் பயனளிக்கின்றது.