நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் மோட்டா தானியங்கள் ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
இந்த முடிவானது பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவினால் மேற்கொள்ளப் பட்டது.
குறிப்பு
2018-19 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஆதரவு விலையானது உற்பத்திச் செலவில் 1.5 மடங்கு அளவில் கடைபிடிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
வேளாண் செலவினம் மற்றும் விலை தொடர்பான ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் ஆண்டிற்கு இரண்டு முறை குறைந்தபட்ச ஆதரவு விலையானது நிர்ணயிக்கப் படுகிறது.
வேளாண் செலவினம் மற்றும் விலை தொடர்பான ஆணையம் ஆனது கரீஃப் மற்றும் ராபி பருவப் பயிர்களுக்கு விலையினைப் பரிந்துரை செய்வதற்காக வேண்டி தனி அறிக்கையைச் சமர்ப்பிக்கும் ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும்.