TNPSC Thervupettagam

குறைந்து வரும் சூரியக் கதிர்வீச்சின் அளவு

May 2 , 2024 15 days 108 0
  • சூரியசக்தி உற்பத்தி தகடுகள் மூலம் பொருளாதார ரீதியாக மின்சாரமாக மாற்றக் கூடிய சூரியக் கதிர்வீச்சின் அளவு ஆனது இந்தியாவில் பல இடங்களில் "ஆபத்தான நிலையில் குறைந்து வரும் போக்கை" கொண்டுள்ளது.
  • உலகளாவிய சூரியக் கதிர்வீச்சு ஆனது, பொதுவாக 1981-2006 வரையிலான காலக் கட்டத்தில் இருந்து குறைந்து வரும் போக்கைக் காட்டியுள்ளது.
  • 1981-2006 காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது 1971-2000 காலக் கட்டத்தில் சூரியக் கதிர் வீச்சின் கிடைக்கப் பெறும் அளவு குறைந்திருந்தது.
  • இருப்பினும், ஒட்டு மொத்தமாக, 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சரியான காரணங்கள் தெளிவாகத் தெரியாத வகையில் இந்தப் போக்கில் மாறுதல் ஏற்பட்டது.
  • தூசிப் படலங்களின் அளவு அதிகரித்தல் மற்றும் மேகமூட்டம் ஆகியவை இதற்கான காரணிகளாகக் கூறப்பட்டாலும், மிகவும் திறம் மிக்க சூரியசக்தி மின் தகடுகளை நிறுவுவது இதை எதிர்கொள்ள உதவும்.
  • தூசிப்படலங்கள் ஆனது சூரிய ஒளியை உறிஞ்சி நிலப்பரப்பில் விழாமல் திசை திருப்புகின்றன என்பதோடு மேலும் அவை அடர்த்தியான மேகங்களை உருவாக்கி, மீண்டும் சூரிய ஒளியானது புவியின் நிலப்பரப்பில் விழாமல் தடுக்கின்றன.
  • சூரியசக்தி மின் தகடுகளின் செயல்திறன் ஆனது, அவற்றின் மீது படும் சூரிய ஒளியின் அளவைப் பொறுத்தே அமைகிறது.
  • இந்தியாவின் மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காக்கள் வடமேற்கில், குறிப்பாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
  • இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் ஆனது, சுமார் 81 GW (1 GW என்பது 1,000 மெகா வாட்) அல்லது மொத்த நிறுவப்பட்ட மின்சாரத்தில் தோராயமாக 17% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்