பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனமானது, ஜம்முவில் நிலை நிறுத்தப் பட்டுள்ள இந்திய இராணுவத்திற்காக குறைவான புகையினை வெளியிடும் உயர் ரக மண்ணெண்ணெயினை (SKO) அறிமுகப்படுத்தியுள்ளது.
உயரமான இடங்களில் அமைந்துள்ள முகாம்களில் உள்ள அறை சூடேற்றிகளில் இவை எரிபொருளாக பயன்படுத்தப்படுவதால் இராணுவத்திற்கு SKO வழங்கப் படுவது இன்றியமையாத ஒன்றாகும்.
சாதாரண மண்ணெண்ணெய் ஆனது அதிக உயரத்தில் பயன்படுத்தப்படும் போது, ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருப்பதால் இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் கேடினை விளைவிக்கும் வகையில் கணிசமான அளவில் புகையை வெளியிடுகிறது.