குற்றப்பிரிவு பல்பயன்பாட்டு முகமையகம் (Crime Multi Agency Centre)
March 16 , 2020 2128 days 765 0
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் குற்றப்பிரிவு பல்பயன்பாட்டு முகமையகத்தைத் துவங்கி வைத்தார்.
இது கடுமையான குற்றங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்த தகவல்களைப் பகிர்வதற்காக நிறுவப் பட்டுள்ளது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 35ஆவது தொடக்கத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அவர் இந்த மையத்தைத் தொடங்கினார்.
காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இணைய வழிக் குற்ற விசாரணை தொடர்பான தொழில் சார்ந்த தரமான மின்-கற்றல் சேவைகளுக்காகத் தேசிய இணைய வழிக் குற்றப் பயிற்சி மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தனது 35ஆவது தொடக்கத் தினத்தை 2020 மார்ச் 12 அன்று கொண்டாடியது.
இது புது தில்லியை தலைமையகமாகக் கொண்டுள்ளது. இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும்.
இது இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றத் தரவுகளைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும் ஒரு இந்திய அரசின் முகமை ஆகும்.