- தேசியக் குற்ற ஆவணக் காப்பகமானது (National Crime Record Bureau - NCRB) 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
- 2018 ஆம் ஆண்டில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. இது 2017 ஆம் ஆண்டை விட 1.3% அதிகமாகும்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்
- 2018 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக பொருளாதாரக் குற்றங்களைப் பதிவு செய்துள்ள மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கின்றது.
- அதைத் தொடர்ந்து முறையே 2, 3, 4 மற்றும் 5வது தர வரிசையில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- ஆட்கடத்தல் மற்றும் வலுக்கட்டாயமாகக் கடத்தல் ஆகிய குற்றங்கள் முறையே 13.8% மற்றும் 10.2% ஆக இருந்தன.
- 2018 ஆம் ஆண்டில் குழந்தைகளைக் கடத்தல் மற்றும் வலுக்கட்டாயமாகக் கடத்தல் ஆகியவை 44.2% ஆகவும் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவர் கற்பழிப்புகள் உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட வழக்குகளானவை 34.7% ஆகவும் உள்ளன.
- 2017 ஆம் ஆண்டில், பொருளாதாரக் குற்றங்களைப் பதிவு செய்துள்ள மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக பங்கைக் கொண்டிருந்தன.