2022 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை (அடையாளம் காணுதல்) மசோதாவானது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது விழித்திரை மற்றும் கரு விழி ஸ்கேன்கள் உள்ளிட்ட உடலியல் மற்றும் உயிரியல் மாதிரிகளைச் சேகரித்து, சேமித்து, அதைப் பகுப்பாய்வு செய்வதற்கு காவல்துறை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும்.
மேலும் இது தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ள எல்லா நபர்களுக்கும் இந்த ஒரு விதிமுறையை உபயோகிக்கவும் முயல்கிறது.
குற்றவியல் வழக்குகளில் அடையாளம் காணுதல் மற்றும் விசாரணைக்காக குற்றவாளிகள் மற்றும் மற்ற நபர்களின் உடல் அளவீடுகளை எடுத்தல் போன்ற சிலவற்றிற்கும் இது அதிகாரம் வழங்குகிறது.
குற்றவாளிகள், கைது செய்யப்பட்ட நபர்கள் அல்லது கைதிகளுக்கு அப்பால் செயல் படுத்தப்படும் விரிவான “மற்ற நபர்கள்” என்பதை இது வரையறுக்கவில்லை.
தலைமைக் காவலர் பதவி வரையிலான காவலர்கள் இதில் அளவீடுகளைப் பதிவு செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
தனியுரிமை உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலான இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் திறனுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடப்படுகின்றது.
இது அரசிலயமைப்பின் 20 (3) என்ற ஒரு சட்டப்பிரிவினை மீறுகிறது என்றும் வாதிடப் படுகின்றது.
மேலும் இது ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகள் என்ற விதிகளையும் மீறுகிறது என்றும் வாதிடப்படுகின்றது.