குற்றவியல் வழக்குகளில் டிஎன்ஏ சான்றுகள் குறித்த வழிகாட்டுதல்கள்
September 19 , 2025 15 hrs 0 min 22 0
கட்டவெள்ளை @ தேவகர் மற்றும் தமிழ்நாடு அரசு இடையிலான வழக்கில், குற்றவியல் விசாரணைகளில் டிஎன்ஏ மாதிரிகளை முறையாகக் கையாளுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் காவலில் வைத்திருப்பது தொடர்பான நடவடிக்கைகளில் தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்ததையடுத்து, மாதிரிகள் சேதப்படுத்தப்படுவது குறித்த கவலைகள் எழுந்தன.
ஆவணங்கள் மற்றும் காவல் வைப்பு நடவடிக்கைகளுக்கு தரப்படுத்தப்பட்ட படிவங்களைத் தயாரித்து வழங்க நீதிமன்றம் அனைத்து மாநிலக் காவல் துறை தலைமை இயக்குனர்களுக்கும் உத்தரவிட்டது.
டிஎன்ஏ மாதிரி சேகரிப்பில் முறையான பேக்கேஜிங், முதல் தகவல் அறிக்கை விவரங்கள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், காவல்துறை மற்றும் சாட்சிகளின் கையொப்பங்கள் இருக்க வேண்டும்.
டிஎன்ஏ மாதிரிகள் 48 மணி நேரத்திற்குள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்தை அடைவதை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் மற்றும் தாமதங்கள் குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கப்பட வேண்டும்.
விசாரணை அல்லது மேல்முறையீட்டின் போது சேமிக்கப்பட்ட மாதிரிகளை நீதிமன்ற அனுமதியின்றி திறக்கவோ அல்லது மாற்றவோ கூடாது.
வழக்கு முடியும் வரை மாதிரிச் சேகரிப்பிலிருந்து காவல் வைப்பு நடவடிக்கை மீதான பதிவேடுகள் ஆனது பராமரிக்கப்பட்டு, நீதிமன்றப் பதிவுகளின் ஒரு பகுதியாக அது இருக்க வேண்டும்.
மனோஜ் மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசு இடையிலான மற்றும் ராகுல் மற்றும் டெல்லி மாநில அரசு இடையிலான வழக்குகள் போன்ற முந்தைய வழக்குகளில், ஆதாரச் சேதப்படுத்துதல் அபாயங்கள் காரணமாக டிஎன்ஏ அறிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்திய சாட்சியச் சட்டத்தின் 45வது பிரிவின் கீழ் டிஎன்ஏ சான்றுகள் கருத்து ஆதாரமாகக் கருதப் படுகின்றன என்றும், அவை அறிவியல் மற்றும் சட்டத் தரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
டிஎன்ஏ மட்டும் கணிசமான ஆதாரம் அல்ல; அதன் ஆதார மதிப்பு என்பது சரியான சேகரிப்பு, கையாளுதல் மற்றும் நிபுணர் பகுப்பாய்வைப் பொறுத்தது.