இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவ் என்பவரின் தண்டனைக்கான உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice - ICJ) பாகிஸ்தானை அறிவுறுத்தியுள்ளது. இந்நீதி மன்றம் இவரின் தூக்கு தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது.
ICJ ஆனது எவ்வளவு விரைவில் இந்தியாவானது தூதரக ரீதியில் இவரைச் சந்திப்பதை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
1963 ஆம் ஆண்டின் தூதரக உறவுகள் மீதான வியன்னா ஒப்பந்தத்தின் விதி 36-ஐ மீறியுள்ளதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இராணுவம் இவரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டவுடன், அது குறித்த தகவலை உடனடியாக இந்தியாவிடம் தெரிவிக்க பாகிஸ்தான் தவறியது.
ICJ பற்றி
ICJ ஆனது நெதர்லாந்தின் தி ஹேக்கில் அமைந்துள்ளது.
இது 1945 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நீதிபதிகளைக் கொண்டுள்ளது. இவர்களின் பதவிக் காலம் 9 ஆண்டுகளாகும்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான தல்வீர் பண்டாரி 2012 ஆம் ஆண்டு முதல் ICJல் நீதிபதியாக உள்ளார்.