இந்தத் தினமானது, வடக்கு அரைக்கோளத்தில் குளிர் காலத்தின் ஒரு அதிகாரப்பூர்வத் தொடக்கத்தைக் குறிக்கிறது.
புவியின் வட துருவம் ஆனது, சூரியனிலிருந்து வெகு தொலைவில் சாய்ந்து காணப் படுவதால், இத்தினம் ஆண்டின் மிகக் குறுகிய பகல் மற்றும் மிக நீண்ட இரவு நாளைக் கொண்டுள்ளது.
குளிர் கால நீண்ட இரவு நாள் ஆனது ஒவ்வொரு அரைக்கோளத்திலும் சில குறிப்பிட்ட தேதிகளில் நிகழ்கிறது.
வடக்கு அரைக்கோளத்தில், இது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 21 அல்லது டிசம்பர் 22 ஆம் தேதியன்று நிகழ்கிறது.
தெற்கு அரைக்கோளத்தில், குளிர்கால நீண்ட இரவு நாளானது ஆண்டுதோறும் ஜூன் 20 அல்லது ஜூன் 21 ஆம் தேதியன்று நிகழ்கிறது.