குளிர்விப்பான்களுக்கான நட்சத்திர அடையாளமிடும் திட்டம்
September 15 , 2018 2655 days 877 0
நாட்டில் ஆற்றல் திறன்மிக்க குளிர்விப்பான்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மத்திய ஆற்றல் அமைச்சகமானது குளிர்விப்பான்களுக்கு நட்சத்திர அடையாளமிடும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இது ஆற்றல் திறன் பணியகத்தால் (BEE – Bureau of Energy Efficiency) வடிவமைக்கப்பட்டது.
இந்த முக்கியத் திட்டமானது, 24வது உலக ஓசோன் தினத்தையும், செப்டம்பர் 16 அன்று கொண்டாடப்படும் மாண்ட்ரியல் நெறிமுறைகளின் 31வது ஆண்டு விழாவையும் முன்னிட்டு துவங்கப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் கீழ் எளிய மற்றும் விரைவான ஒப்புதலுக்காக ஒரு ஆன்லைன் பதிவு தளத்தை ஆற்றல் திறன் பணியகம் (BEE) உருவாக்கியுள்ளது. இந்தத் தளத்தில் உற்பத்தியாளர்களால் குளிர்விப்பான் சாதனங்களுக்கு பொருத்தமான நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுவதற்கு பதிவு செய்ய முடியும்.
இந்தத் திட்டத்தின் மூலம் 2019ஆம் ஆண்டில் 500 மில்லியன் அலகு என்ற அளவிற்கு மின்சாரம் சேமிக்கப்படும். இதனுடன்5 மில்லியன் டன் CO2க்கு நிகரான பசுமை இல்ல வாயுக்களும் குறைக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.