ரிநியூ பவர் நிறுவனமானது உலகப் பொருளாதார மன்றத்தின் குளோபல் லைட் ஹவுஸ் நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்த, ஆதரவளிக்கும் சமுதாய அமைப்பு, லாபமிக்க வளர்ச்சி ஆகியவற்றை அடைய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களை இது அங்கீகரிக்கிறது.
ரிநியூ பவர் என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தி நிறுவனமாகும்.
இந்த ஆண்டில் குளோபல் லைட்ஹவுஸ் நெட்வொர்க்கின் அங்கீகாரத்தைப் பெற்ற இரண்டு இந்திய நிறுவனங்களில் ரிநியூ பவர் நிறுவனமும் ஒன்றாகும்.