குளோபல் வங்கிகளின் ‘அதிக ஆபத்து விளைவிக்கக்கூடிய எல்லையின் பட்டியல்‘
July 10 , 2018 2493 days 811 0
சமீபத்தில் முக்கியப் பாதுகாப்பாளர் வங்கிகள் ‘அதிக ஆபத்தை உடைய எல்லைகளைக்’ கொண்ட 25 நாடுகளின் பட்டியலை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடன் (SEBI - Securties and Exchange Board of India) பகிர்ந்துள்ளது.
வெளிநாட்டு நிதிகளின் பாதுகாவலராக இருக்கும் குளோபல் வங்கிகள் சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ் மற்றும் மொரீசியஸ் உள்பட 21 நாடுகளை ‘அதிக ஆபத்தை உடைய எல்லைகளாக‘ பெயரிட்டுள்ளது.
பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் இந்த நிதியின் மூலம் பயனடையும் முதலாளிகள் ஆகியோர் ‘அதிக ஆபத்தை உடைய எல்லைகள்‘ வழியாக இந்தியாவிற்குள் நுழையும்போது அதிகளவில் சோதனையிடப்படுவார்கள்.
இந்திய செலவாணியின் மேல் வர்த்தகம் செய்வதற்கு இந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நிதியத்தில் பங்கு பெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்வார்கள்.
56 நாடுகளின் மூலமாக செபியிடம் பதிவு செய்யப்பட்ட அந்நிய தொகுப்பு முதலீடுகள் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. இவற்றில் 25 நாடுகள் அதிக ஆபத்தானவை என கணக்கிடப்பட்டுள்ளன.