தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு (SC-NBWL), மத்திய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மிகவும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் குள்ள காட்டுப் பன்றியைச் சேர்க்கப் பரிந்துரை செய்துள்ளது.
குள்ள காட்டுப் பன்றி (போர்குலா சால்வினியா) என்பது உலகின் மிகச்சிறிய மற்றும் அரிய காட்டுப் பன்றி இனமாகும் என்பதோடு முக்கியமாக அசாமின் புல்வெளிகளில் இது காணப் படுகிறது.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) தனது செந்நிறப் பட்டியலில் குள்ள காட்டுப் பன்றியை அருகி வரும் இனமாக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியுள்ளது.
இந்தப் பரிந்துரையானது, உயிரினங்களை மீட்டெடுப்பதற்கும் மற்றும் பாதுகாப்பு ஆதரவிற்காகவும் வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு (IDWH) திட்டத்தின் கீழ் இந்த இனத்தைக் கொண்டுவரும்.
இந்த உயிரினத்தை பாதுகாக்கும் முயற்சிகளை அசாமில் இருந்து ஜல்தாபாரா (மேற்கு வங்கம்) மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள் போன்ற பொருத்தமான வாழ்விடங்களுக்கு விரிவுபடுத்த இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) பரிந்துரைத்து உள்ளது.