யுனிசெஃப் வெளியிட்ட இந்த அறிக்கையானது, குழந்தைப் பருவ உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளில் உலகளாவிய அதிகரிப்பை எடுத்துக் காட்டுகிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் 5 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளில் 20 சதவீதத்தினர் தற்போது அதிக எடையுடன் வாழ்கின்றனர்.
2025 ஆம் ஆண்டில் பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் பாதிப்பு 9.4 சதவீதமாக இருந்தது.
2025 ஆம் ஆண்டில் அதே வயதினரிடையே எடை குறைபாட்டின் (உயரத்திற்கேற்ற எடையில்லாமலிருத்தல்) பாதிப்பு 9.2 சதவீதமாக இருந்தது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர்.
தெற்காசியாவில், 2000 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 5 முதல் 19 வயதுடையவர்களிடையே அதிக எடை பாதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தப் போக்குகளை அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPF) மற்றும் சர்க்கரை பானங்களின் பரவல் மற்றும் சந்தைப்படுத்துதலுடன் இந்த அறிக்கை இணைக்கிறது.