TNPSC Thervupettagam

குழந்தை திருமண ஒழிப்பு தினம் - ஐநா சபை

September 8 , 2026 6 days 107 0
  • குழந்தைகளுக்கான முன்கூட்டிய மற்றும் கட்டாயத் திருமணங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக நவம்பர் 27 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்து உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று ‘பால் விவா முக்த் பாரத்’ (குழந்தை திருமணமில்லா இந்தியா) பிரச்சாரம் தொடங்கப்பட்டதால் இந்த தேதி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இந்த பிரச்சாரம் 2023 ஆம் ஆண்டில் NDTV மற்றும் Just Rights for Children ஆகியவற்றால் தொடங்கப் பட்டது, அதே நேரத்தில் Just Rights for Children நிறுவனர் புவன் ரிபு ஐ.நா. தீர்மானத்தை முன்மொழிந்தார்.
  • தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5-இன்படி (NFHS-5), 20-24 வயதுடைய பெண்களில் 23.3% பேர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துள்ளனர்; NFHS-6-இன்படி (2023-24) 20.1% ஆக பதிவாகியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்குள் குழந்தை திருமணத்தின் பரவலை 10% குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 5, இலக்கு 5.3 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் குழந்தைகளுக்கான முன்கூட்டிய மற்றும் கட்டாய திருமணத்தை ஒழிக்க வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்