குழந்தை திருமணத்திற்கு எதிரான பிர்ஹோர் பழங்குடியினர்
December 20 , 2024 277 days 300 0
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதி என்ற பகுதியில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் பழங்குடியினர் குழுவான பிர்ஹோர் பழங்குடியினர் முதன்முறையாக குழந்தைத் திருமணத்திற்கு எதிரான இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
பிர்ஹோர் இன மக்கள் காடுகளைச் சார்ந்துள்ள, பகுதியளவு நாடோடி வாழ்க்கை முறையினைச் சார்ந்த, பொருளாதார ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் மற்ற இனங்களை விட மிகவும் பின்தங்கி உள்ள பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான குழந்தைகளுக்கான உரிமைகள் கூட்டணி (JRC) எனப்படுகின்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமானது, இதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.